கருப்பையில் சுமந்தவளே...
**ஈரைந்து மாதம்
வயிற்றில் சுமந்தாய்...
**ஆயுள் முழுவதும்
இதயத்தில் சுமக்கிறாய் - உன்
உதிரத்தை எனக்கு
உணவாக்கினாய்...
**கண்களால் காணும் தெய்வமே...
உன் அன்பிற்கு அளவுகோலா ?
படைப்பின் பரம்பொருளாம்
பிரம்மனுக்கும்
படைக்க முடியா கருவி...
**உனக்கும் எனக்கும்
ஆயுள்ரேகை ஒன்றாகாதோ ?
**ஈரேழு ஜென்மம்
தரித்தாலும் - உனக்கே
மகளாக மாட்டேனோ???